சமூக மாற்றத்தில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றம் பயிற்சி நெறிவிழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் (ஏடைரவார ஊநவெசந கழச ர்ரஅயn சுநளழரசஉந னுநஎநடழிஅநவெ) பயனாளிகளுக்காக ஒழங்கு செய்யப்பட்ட சமூக மாற்றத்தில் அபிவிருத்தியை நோக்கிய தகவல் பரிமாற்றம், தகவல் பல்நோக்கு இயலளவைக் கட்டியெழுப்பும் பயிற்சி நெறி கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் சபா மண்டபத்தில் திங்கட்கிழமை 17.12.2018 இடம்பெற்றது.

இச்செயலமர்வில் சமூக ஆய்வு எழுத்தாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் வளவாளராகக் கலந்து கொண்டார்.


முல்லைத்தீவு  மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் செயற்படும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பயனாளிகளான பெண் செயற்பாட்டாளர்கள் சுமார் 40 பேர் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்.

சுய சக்தியும் பங்கு பற்றலுடனும் கூடிய அபிவிருத்திக்காக பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தேவைகளையும் காத்திரமான முறையில் நவீன தொடர்பாடல் வசதிகளைப் பயன்படுத்தி முன்வைத்தல், தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு நவீன தொடர்பாடல் வசதிகளை குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், சமகால சமூக இயங்கியல் முறைகளில் சமூக ஊடகங்களின் பாத்திரப் பங்கு,

சமூக மாற்றத்தில் தமது முக்கிய பங்கினை ஏற்கத் தேவையான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல்.

வளச்சியுடன் கூடிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தேவையான மனப்பாங்குகளையும் பெறுமானங்களையும் தனி நபர்களும் குழுக்களும் பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்களில் செயலமர்வு நடாத்தப்பட்டது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் வடபிராந்தியத்துக்கான ஆவணப்படுத்தல் அலுவலர் ஆர். கோமதி, சமூக இணைப்பு அலுவலர் ரீ. திவாகர் உட்பட இன்னும் பயனாளிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


No comments