காத்தான்குடி ரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா 2018காத்தான்குடி, ரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பாலர் பாடசாலை பணிப்பாளர் எம்.ஏ.எம். சுல்மி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அதிதிகளாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், நகர சபை உறுப்பினர்கள் ,பாலர் பாடசாலை அதிபர் திருமதி. மஷாகீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
No comments