மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா
சமூகத்துக்கு முக்கிய பங்காற்றும் உலமாக்கள் தொழில்நுட்ப, பொறியியல் துறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் 17 பேரும், கணித அளவியலாளர் பிரிவில் 7 பேரும் உள்ளடங்களாக 24 பேருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் அங்கு மேலும் கூறியதாவது:- இலங்கையில் அறபு மத்ரஸாக்களில் இருந்து வெளியேறுகின்ற உலமாக்கள் தகவல் தொழில்நுட்ப, கட்டிட நிர்மாண, பொறியியல் துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதன் மூலம் உலமாக்கள் சமூக அந்தஸ்த்துள்ள நல்ல தொழில்களைப் பெற்றக்கொள்ள வேண்டும். 

இதன் அடிப்படையில் எமது நீண்ட கால சிந்தனைக்கு அமைவாகவே மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஐந்து பல்கலைக்கழக கல்லூரிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது. அப்போது, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக விடயப்பரப்புக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு இந்த மட்டகளப்பு பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பித்தோம். இதில் தொழில்நுட்ப பாடங்களும், கட்டிட நிர்மாண, பொறியியல் துறை சார்ந்த பாடங்களும் கற்பிக்கப்டுகின்றதுடன், அரசாங்க வரையறைக்குள் அது சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. 

உயர் நிலை டிப்ளோமா கற்கைநெறிகளை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் பயில முடியும். அதற்கு அப்பால் சென்று பட்டப்படிப்பினை தொடரும் வகையில்  மட்டக்களப்பு கெம்பஸினை நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். மட்டக்களப்பு கெம்பஸ் வெகு விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். – என்றார்.
 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.