கல்முனை சாஹிரா கல்லூரியில் காலை ஆராதனை சதுக்கம் திறந்து வைப்பு


(எம்.எஸ்.எம். ஸாகிர்)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் சுமார் 5 இலட்சம் பெறுமதியான காலை ஆராதனை சதுக்கம் ஒன்று கிழக்கின் மாணிக்கம் ஏ.எல்.காபூல் ஆஸாத்தின் உதவியோடு கட்டப்பட்டுசர்வதேச சிறுவர் தினத்தன்று மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக ஏ.எல்.காபூல் ஆஸாத் கலந்து கொண்டதோடுஅவருக்கு கல்லூரி அதிபர் எம்.எஸ். முஹம்மட் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதன் போது கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் தங்களது சாதனையை வெளிக்காட்டிய கல்லூரி மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைத்தனர்.

நிகழ்வில்,  பாடசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்பழையமாணவர்கள்ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.