புதிய காத்தான்குடி கர்பலா உள்ளக வீதி அபிவிருத்தி தொடர்பில் மக்கள் சந்திப்பு(ஆதிப் அஹமட் )

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான  யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பெருமுயற்சியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் "கம்பரெலிய" கிராம அபிவிருத்தி திட்டமூடாக 20 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்படவுள்ள கர்பலா உள்ளக வீதியில் வசிக்கும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான  யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் கலந்து கொண்ட மேற்படி கலந்துரையாடலில் இவ்வீதி வேலைகள் ஆரம்பிக்கப்பட முன்னதாக மக்கள் செய்துகொள்ளவேண்டிய அவசியமான விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வில் யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் இணைப்பாளர் டீ.எம்.தெளபீக் JP உற்பட மேற்படி வீதியில் வசிக்கும் பொதுமக்கள்,பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் இவ்வேலைத்திட்டத்தை கொண்டுவந்த பிரதியமைச்சர் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் அவர்களுக்கும் தங்களின் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.