அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி சமூகத்தை ஒரு போதும் மறக்கவில்லைஏ.எல்.டீன்பைரூஸ்

அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி சமூகத்தை ஒரு போதும் மறக்கவில்லை  குறைந்த வருமானம் பெறும்  32 குடும்பங்களுக்கு பிரதியமைச்சர் அமீர் அலியினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு.

சுய தொழிலில் ஈடுபடும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த (2018.09.27 வியாழன்) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது நிகழ்வின் பிரதம அதிதியாக கடற்றொழில் நீரியல் வழங்கள் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கு உபகரணங்களையும்  வழங்கி வைத்தார்

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருவளர்  உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் AMM..மாஹீர் jp , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர்  TL.ஜௌபர்கான் jp, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  நூறானிய்யா வட்டார அமைப்பாளர் எம்.முகம்மட் சப்ரி அதிகார்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.