தனது விடுதலை தொடர்பில் உதவிய அத்தனை உள்ளங்களுக்கு்ம் நன்றியை தெரிவித்துள்ளார் கமீர் நிசாம்தீன்பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைiயைச் சேர்ந்த  கமீர் நிசாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை வாழ் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். 
 தனது  விடுதலை குறித்து ..........அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஸ்கந்தகுமார்  லால் விக்ரமதுங்க மற்றும் பிரமுதிதா ஆகியோர் எனக்கு உறுதுணையாக இருந்து உதவியமைக்காக அவர்களுக்கு மிகவும் நன்றிகள். 
மேலும், இலங்கை வாழ் பொதுமக்கள் மற்றும் உயரதிகாரிகள் நான் குற்றமற்றவர் என நம்பியமைக்காகவும் நான் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். பெளத்த, கிறிஸ்தவ, இந்து மத குருமார்கள் மற்றும் இலங்கை ஊடகங்களுக்கும் எனது நன்றிகள். குறிப்பாக உண்மையான மற்றும் சரியான செய்திகளை வெளியிட்ட இலங்கை ஊடகங்களுக்கும், அத தெரண செய்தி சேவைக்கும் ஒரு மிகப் பெரிய நன்றிகள். கமீர் நிசாம்தீன் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியிருந்தனர். 

sor/ad
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.