மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கும் அதிபர், ஆசிரியர்களை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.-யதார்த்தன்-

மாணவர்களை ஆடு,மாடு போன்று மூர்க்கத்தனமாக அடிப்பது எந்த வகையிலும் கூடாது 
மூர்க்கத்தனமாக தாக்கும் அதிபர், ஆசிரியர்களை நீதி மன்றில் முன்னிலைப்படுத்தி  சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதி இளன்செழியன் தெரிவித்துள்ளார்.

சட்டம் கடுமையானது சித்திரவதை சட்டமானது அரச அலுவலகங்களில்  கடமைகளின் போது உங்கள் கீழ் பணிபுரியும் சிற்றூழியர், அல்லது நபர், படிக்கின்ற மாணவனை உயரதிகாரி தாக்குவது, அடிப்பது  சித்திரவதை சட்டமாகும். அதிகாரம் படைத்த நபருக்கு மேல்நீதி மன்றில் 7 வருட சிறை தன்டனை குற்றம் என்பதனை மறந்து விடாதிர்கள் என நீதிபதி இளன்செழியன் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பிரிவு 13 அரசியலமைப்பு சட்டத்தின் படி சித்திரவதை செய்வது அடிப்படை உரிமை மீறலாகும். 
பாதிக்கப்பட்டவர் உயர் நீதிமன்றில் 126 பிரிவின் கீழ் Suprin Court சென்று அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்தால் உங்கள் வேளையும் பறிபோய், பாதிக்கப்பட்டவருக்கு 
நஷ்டஈடு கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் நீதிபதி இளன்செழியன் எச்சரித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.