காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

.

ஏ.எல்.டீன் பைரூஸ்


காத்தான்குடி  மஃஹதுஸ்ஸுன்னா  அந்நபவிய்யா   மகளிர்   அறபுக் கல்லூரியில்  ஏழாண்டுகள்  இல்மைக்கற்று   பட்டம்பெறும்    92 ஆலிமாக்கள்.

காத்தான்குடியில்           கடந்த 2011 ஆரம்பிக்கப்பட்ட  மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா  மகளிர்   அறபுக்   கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா  எதிர்வரும் (16.09.2018 ஞாயிறு) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கல்லூரியில் தலைவர் அஷ்ஷெய்ஹ் MCM.றிஸ்வான் (மதனி) தலைமையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் விளக்களிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு (03.09.2018 திங்கள்) இரவு கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

எதிர்வரும் (16.09.2018 ஞாயிறு) நடைபெறவுள்ள கல்லூரியின் முதலாவது  அல்-ஆலிமா பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவென நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் மார்க்க அறிஞர்கள், கல்லூரி அதிபர்கள், சங்கைக்குறிய ஆலிம்கள், அமைப்புகளின் தலைவா்கள்,முக்கிய பிரமுகர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாக இதன் போது தெரிவித்தனர்.

மேற்படி மதரசாவின் தலைவராக அஷ்ஷெய்ஹ் MCM.றிஸ்வான் (மதனி) செயலாளராக அஷ்ஷெய்ஹ் AAM ஆரிஸ் (மதனி) பொருலாளராக அல்ஹாஜ் AMM மாஹிர் JP  உட்பட  வைத்தியர்கள், பொறியியலாளர்கள், உலமாக்கள், கல்வியாலர்கள் என  42 பேர்  நிர்வாக சபை உறுப்பினர்களாக இருந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மதரசாவில்........

ஷரீஆ மற்றும் ஹிப்ழு பிரிவுகளில் சுமார் 233 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். விரிரையாளர்கள் மற்றும் ஆலிமாக்கள் என 15 பேர் கடமையாற்றி வருவதாக இதன் போது தெரிவித்தனர்.

புதிய காத்தான்குடி ஏரியாவிலிருந்து கூடுதலான மாணவிகள் பல்வேறு பெகாருளாதார கஷ்டங்கள், பிரச்சினைகள், சிரமங்களுக்க மத்தியிலும் அல்லாவின் கலாமை, மார்க்க கல்வியை கற்க வேண்டும் என்ற துாய நோக்கோடு  ஏழாண்டுகளாக கல்வியினை கற்று  92 பேர் ஆலிமாக்களாக பட்டம் பெற்று வெளியாகின்றமை மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாகும்.

எனவே மேற்படி ஆலிமாக்களின்   நல் வாழ்விற்காக பிரார்ப்பிப்பதோடு விழா சிறப்பாக அமைய அனைவரும் தவறாக கலந்து கெண்டு சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.