பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 16 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணிக்கு சம்மாந்துறை அல் - மர்ஜான் மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

அல் - குர்ஆன் ஆய்வுக்கான அஷ்ரப் அகடமியின் ஏற்பாட்டிலும்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா நிகழ்வில் சிறப்பு உரையாற்றவுள்ளார்.
இதன்போது அழகிய தொனியில் அல் - குர்ஆன் என்ற தொனிப்பொருளில் அல் - குர்ஆன் முறத்தல்களும் கஸீதாக்களும்  இடம்பெறவுள்ளன.
அமைச்சர்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள்ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில்அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.