கிழக்குவாழ் முஸ்லிம்களின் நலன்கருதி இலவச ஜனாசா சேவை. காத்தான்குடி நகரசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றம்.


ஏ.எல்.டீன் பைரூஸ்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் (Batticaloa Teaching Hospital)
மரணிக்கும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வசதி குறைந்த முஸ்லிம் சகோதரர்களின் ஜனாசாக்களை கொண்டு சென்று அவர்களின் வீடுகளில் ஒப்படைக்கின்ற இலவச ஜனாசா சேவை திட்டம் ஒன்றினை அமுல்படுத்த காத்தான்குடி நகரசபையின் (30)  வியாழன் நடைபெற்ற அமர்வின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி திட்டம் நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஏ.எம்.பெளமி JP யினால் கொன்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதது.
மேற்படி திட்டத்தினை அமுல்படுத்த காத்தான்குடி நகர சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
முன்மாதிரி மிக்க காத்தான்குடியில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நலன் கருதி காத்தான்குடி நகரசபை எடுத்திருக்கும் மேற்படி தீர்மானம் வரவேற்கத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.