நகர சபை உறுப்பினர் சல்மாஹம்சா, மீராவோடை ஹயறுன்னிஷா ஆசிரியை கலந்து கொண்ட ஊடக மாநாடு.


ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், பெண்களுக்கான வலுவூட்டளுக்கும் அபிவிருத்திற்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்சா மற்றும் ஓட்டமாவடி மீராவோடை அல்ஹிதாயா வித்தியாலய ஆசிரியை S.A. ஹயறுன்னிஷா ஆகியோரின் ஏற்பாட்டினில் ஊடகவியலாளர் சந்திப்பு (13.08.2018 திங்கள்)  இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த சல்மா ஹம்சா இன்று எல்லோராலும் 
அதிகம் பேசப்படுகின்ற விடயம் "முஸ்லிம் தனியார் திருந்த சட்டமாகும்"  இது விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தலைமைகள், கல்விமான்கள், உலமாக்கள் உட்பட சகல தரப்பினரும் ஒன்றினைந்து இது விடயமாக முடிவு செய்ய வேண்டுமே தவிர  மாற்று சக்திகளின் சதிக்கிப் பின்னால் நின்று வரலாற்று துரோகத்தினை செய்து விடக் கூடாது என்று தெரிவித்தார்.

ஆசிரியை ஹயறுன்னிஷா கருத்து தெரிவிக்கையில் எங்களது சமூகத்தில் முஸ்லிம் தனியார் சட்ட  விடயத்தில் சில கருத்து முரண்பாடுகள் தோன் றியுள்ளன  இதற்கு அடிப்படைக் காரணம் எங்களது முஸ்லிம் பெண்களிடத்தில் இஸ்லாமிய ஷரீஆ   விடயத்தில் அதனை சரியாக விளங்கி கொள்கின்ற ஆற்றல் இல்லாமையும் ஒரு காரணம் என்று தெரிவித்தார்.

No comments