போதையற்ற ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு பாரிய பொறுப்புள்ளது.அதிகாரங்கள் இருக்கின்ற போது  அதனுாடாக  பல்வேறு பணிகளை செயல்படுத்துவது  போன்று  இன்று காத்தமண்ணை  காவு கொண்டுள்ள போதை விடயத்தில்  அதிதீவிர கவனம் செலுத்தி அவற்றினை இல்லாது ஒழிப்பதில் அதி கூடிய கவனம் செலுத்துவது  இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் தலையாய கடமையாகும்.இன்று காத்தான்குடியில் பேசு பொருளாக மாறியுள்ள போதை பாவனை மற்றும் விற்பனை தொடர்பில்  அது பற்றி ஆராய அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில்  ஊரின் சகல தரப்பினரையும் ஒரே மேசைக்கு அழைத்து  ஆக்கபுர்வமான முடிவினை எடுக்க  அமைச்சர் முன்வர வேண்டும்   .

மேலும் எதிர்கால சந்ததியினரின்  மீது அக்கறை கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதனைப் போன்று  காத்தான்குடி மண்னிலிருந்து போதையை இல்லாதொழிக்க இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முன்வர வேண்டுமென பலரும் தெரிவிக்கின்றனர்

யதார்த்தன்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.