காத்தான்குடி ஊடகவியலாளர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்


காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர் முகம்மட் சஜீ என்பவர் மீது விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டினில் திங்கள் (27) காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு  முன்னால் இடம் பெற்றது.

மேற்படி கவனயீர்ப்புப்  போராட்டமானது  ஊடகவியலாளர்கள் மீதான கொலை அச்சுறுதல்கள் மற்றும் மிரட்டல்கள் என்பவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கு எதிராக செயல்படும் யாராக இருந்தாலும் அவர்களை பாரபட்சமின்றி  பொலிசார் உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி மேற்படி  கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி போராட்டத்தில்  காத்தான்குடி நகர முதல்வர்  SHM அஸ்பர், நகர சபை உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் உறுப்பினர்கள், காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள்,  தமிழ்,முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் இ்வ்வாறான சம்பவங்கைளைக் கண்டித்து அவர்கள் கருத்துக்கள் தெரிவித்தமையும்  குறிப்பிடத்தக்கது.

பயாஸ் அஹமட்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.