முஸ்லிம் விவாகச் சீர்திருத்தம்: ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் கருத்தரங்கு இன்று

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் முஸ்லிம் விவாக - விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (08) புதன்கிழமை இரவு 6.45 மணிக்கு (மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து) கொழும்பு - 10 ஸ்ரீசங்கராஜ மாவத்தை, அல் - ஹிதாயா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், முஸ்லிம் விவாக - விவாகரத்து சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராயப் ஆராயப்பட்டு தெளிவுபடுத்தவுள்ளதாக ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.இந்நிகழ்வில் அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.