காத்தான்குடி நகர முதல்வர், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் உறுப்பினர்களின் கவனத்திற்கு
பிராந்திய நிருபர்
காத்தான்குடி கடற்கரை பகுதியில் சூழலை பாதிக்கும் வகையில் பொது இடங்களில் இருந்து கொண்டு தொடராக சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் குறிப்பிட்ட சிலரின் நடவடிக்கையினை தடுத்து நிறுத்தி விடுமாறு பொதுமக்கள் பலரும்  வேண்டிக் கொள்கின்றனர்

காத்தான்குடி கடற்கரை பகுதியில் நகரசபைக்குச் சொந்தமான தின்மக் கழிவகற்றல் அமைந்துள்ள காணியின் அருகில் உள்ள பகுதியில் பி.ப.3.30 - 6.00 மணிவரை மேற்படி கூதாட்டம் தொடராக இடம் பெற்று வருவதனை காண முடிகின்றது.

குடும்பம் சகிதம் கடற்கரைக்கு வருபவர்கள் மாத்திரமின்றி உலமாக்கள், பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், வெளியூர் மக்கள் என பலரும் வந்து போகின்ற மேற்படி பகுதியில் இஸ்லாம் வெறுத்த இவ்வாறான சூதாட்டத்தில் பொது இடங்களில் இருந்து கொண்டு ஈடுபடும் இவர்கள் விடயத்தில் அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் பலரும் வேண்டுகின்றனர்No comments