காத்தான்குடி நகரசபை தவிசாளருக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சபீல் கடிதம்......

காத்தான்குடி நகரசபை தவிசாளருக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்  அஷ்செய்க் ALM. சபீல் (நழீமி) கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக எமது லங்கன்வொய்ஸ் ஊடக பிரிவிற்கு வட்ஸ்அப் மூலம்  தெரிவித்துள்ளார்......

கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தவிசாளர், 
நகர சபை, காத்தான்குடி.

 தவிசாளர் அவர்களுக்கு!

*திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான  விபரம்கோரல்.* 

 திண்மக்கழிவகற்றல் விடயம் தொடர்பாக பின்வரும் இரு விடயங்கள் பற்றிய விபரங்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1.நகரசபையினால் பொருத்தப்பட்ட 'கவசிமா' இயந்திரம் தீயினால் சேதமடைந்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்படியாயின் இந்த இயந்திரத்தினை பராமரிக்கின்ற பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டிருந்தது....?

♦அதற்கான பராமரிப்பு ஒப்பந்தம் ஏதும் செய்யப்பட்டிருந்ததா.....?

♦ இவ்வாறானஎதிர்பாராத சேதங்களைக் கருத்திற் கொண்டு காப்புறுதி நடவடிக்கைகள் ஏதும் செய்யப்பட்டிருந்ததா....?

♦அப்படியாயின் அதன் விபரங்கள் என்ன.....?

♦சேதம் ஏற்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா....?

♦ அதற்கான அறிக்கைகள் ஏதும் இதுவரையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா..?

♦தீ சம்பவத்திற்கு பொறுப்பானவர் என எவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனரா....? அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா..?
    
♦இதனைத் திருத்துவதற்கு மதிப்பீடு செய்யப்பட்ட உத்தியோக பூர்வமான கணக்கீடுகள் ஏதும் பெறப்பட்டுள்ளதா.....?
அதை வழங்கிய நிறுவனம் எது....?

♦இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காப்பு நடவடிக்கைகள் என்ன....?

*2. உக்காத கழிவுகளை எரியூட்டுவதற்கான விசேட திட்டம்.* 

இத்திட்டத்தினை செயற்படுத்த ஒரு நிறுவனம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக 30 வருட நீண்டகால குத்தகைக்கு நகரசபைக்கு சொந்தமான காணி வழங்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பில் பின்வரும் விடயங்களை தந்துதவுமாறு கோருகின்றேன்.

  ⭐இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர், முகவரி, அவர்களின் முன்அனுபவம் தொடர்பான ஏனைய விடயங்கள்.

⭐இத்திட்டத்திற் கென ஏனைய நிறுவனங்கள் ஏதும் அடையாளப்படுத்தப்பட்டதா? அப்படியாயின் அவை எவை? இந்தத்தெரிவு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது...? இதனை யார் மேற்கொண்டார்கள்...?

⭐இதற்கென திறந்த மனுக்கோரல்கள் ஏதும் இடம்பெற்றனவா....?


⭐இத்திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படும் என்ற பூரண அறிக்கை நகர சபைக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறதா..? அப்படியாயின் அதன் பிரதி ஒன்றைத்தரவும்.

⭐இத்திட்டத்திற்காக பாதீடு செய்யப்பட்டுள்ள தொகை என்ன.....?

இத்திட்டத்தினை இலங்கையில் முதற்தடவையாக ஒரு பரீட்சார்த்த திட்டமாகவே காத்தான்குடியில் மேற்கொள்ளப்போவதாக அறியக்கிடைத்தது. காத்தான்குடியின் சனநெருக்கடி, நிலத்தட்டுப்பாடு என்பதனை கருத்திற்கொண்டு இதற்கான விசேடமான சூழல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா...?அவ்வாறாயின் அந்த அறிக்கையின் பிரதியினைத்தரவும்.

⭐ இதனை நீண்ட கால குத்தகைக்கு விடுவதற்கான நடைமுறை சரத்துக்கள் என்ன? குறிப்பாக திட்டம்தோல்வியடைந்தால் எப்படி காணியை மீளப்பெறுவது....? நகரசபைக்கு வருமான பங்கீட்டினை எப்படி பெறுவது.....? 
எதிர்பாராத சூழல் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான காப்பீடு நஷ்டஈடு பற்றிய விபரங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை அடுத்த சபை அமர்விற்கு முன்பாக வழங்கும்படியும் இந்த விடயத்தினை அடுத்த சபை அமர்வில் சகல உறுப்பினர்களும் விரிவாக கலந்துரையாடுவதற்கு ஏதுவாக அதனை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளுமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

"நன்றி."
இப்படிக்கு
ALM.சபீல்
நகரசபை உறுப்பினர் காத்தான்குடி

பிரதிகள்:
செயலாளர்- காத்தான்குடி நகர சபை
உள்ளுராட்சி ஆணையாளர் மட்டக்களப்பு.

No comments