20 ஆவது திருத்தத்தை தோற்கடிக்கவும் நீதிமன்றை நாடவும் சஜித் அணி முடிவு.


20 ஆவது அரசியல் யாப்பு திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) தீர்மானித்துள்ளது. 

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கூடிய பாராளுமன்ற குழு ஏகமனதான இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கான பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்வைத்ததுடன் அதனை பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க வழிமொழிந்து உறுதி செய்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருதத்தில் காணப்படும் ஜனநாயக விழுமியங்களை மேலும் வலுப்படுத்துவதும்  (19+) பத்தொன்பது பிளஸ் வரை அதனை முன்னெடுப்பதும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும். 

எனவே 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 

20வது திருத்தத்தில் நாட்டு மக்களுக்கு ஒவ்வாத ஏற்பாடுகள் உள்ளதாகவும் தனிமனித நன்மை கருதி இந்த யாப்பு வரையப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 
vkNo comments