பிள்ளையானுக்கு அமைச்சுப் பதவி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியில் இம்முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள அந்த கட்சியின் தலைவரான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானுக்கு நாளைய தினம் அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாளை கண்டியில் நடைபெறும் பதவிப்பிரமான நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது விளக்கமறியலில் இருக்கும் பிள்ளையானை நாளை பதவிப்பிரமான நிகழ்வில் கலந்துகொள்வதற்கு தேவையான அனுமதி பெற்றுக்கொள்வதற்காக நேற்று சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு முன்னர், பொதுஜன பெரமுன தலைவர்கள் அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு அமைச்சு பதவி வழங்குவதாக உறுதியளித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பிள்ளையன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments