முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள பத்திரம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கான 20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் வரைவு நகல் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே முன்வைக்கப்படும் – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதியின் பதவிகாலம் என்பது ஐந்தாண்டுகளாகவே இருக்கும். அதில் மாற்றம் வராது. அதேபோல் நபரொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதி பதவியை வகிக்கமுடியும் என்ற விடயத்திலும் திருத்தம் எதுவும் செய்யப்படாது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்ட பின்னரே, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி ஆரம்பமாகும் எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

No comments