அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கம்பஹா மாவட்ட மக்கள் வாழ்த்து தெரிவிப்பு

(எம்.எல்.எஸ்.முஹம்மது)
புதிய அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக  ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று(12)பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கம்பஹா மாவட்ட    ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  ஆதரவாளர்கள் சார்பாக அக்கட்சியின் கம்பஹா மாவட்ட செயற்பாட்டாளர் எம்.எல்.அவ்பர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்

மீண்டும்  இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் தேசிய  ரீதியில் சேவையாற்றும் வகையில்  கௌரவ கடற்றொழில் அமைச்சராக 

நியமிக்கப்பட்டமை  தொடர்பில் கம்பஹா மாவட்ட  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  ஆதரவாளர்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ச்சியான அரசியல் பயணத்திற்கு கம்பஹா மாவட்ட மக்கள் தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் வழங்கக் காத்திருக்கின்றனர் எனவும் அவ்பர்  அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள தனது வாழ்த்துச் செய்தியில் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

No comments