காத்தான்குடி சம்மேளனத்தின் புதிய நிருவாக சபை தெரிவு புதிய தலைவராக பொறியியலாளர் தெளபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர்.
ஏ.எல்.டீன்பைரூஸ்.
காத்தான்குடி சம்மேளனத்தின் புதிய நிருவாக சபை தெரிவு இடம் பெற்றது. புதிய தலைவராக பொறியியலாளர் தெளபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (2020/08/16 காலை 08.30.AM) இடம் பெற்ற (பிற்போடப்பட்ட)
காத்தான்குடி சம்மேளனத்தின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் 2020/2021 ஆண்டுக்கான புதிய தலைவராக சுழற்சி அடிப்படையில் 
(காத்தான்குடி.5 ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயல் சார்பாக
அதன் தலைவர்) பொறியியலாளர் அல்ஹாஜ் AMM.தெளபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளராக (காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாசபை சார்பாக) அஷ்ஷெய்க். அல்ஹாபிழ் MIM.ஜவாஹிர்.BA (பலாஹி) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருலாளராக (சுழற்சி அடிப்படையில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்சார்பாக) அல்ஹாஜ். ABM.முனாஸ்/BBA நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments