ஓய்வு பெற்றார் களுத்துறை முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின்அதிபர் திருமதி நாஜிபா ஹம்ஸா

ஓய்வு பெற்றார் களுத்துறை முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின்அதிபர் திருமதி நாஜிபா ஹம்ஸா

கற்றலுக்கோர் களமாகி கல்லாமை கலைந்து வீற்றிருக்கும் மாபெரும் கல்விக்கூடம் களுத்துறை முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தில் மூ பத்து அகவைகள் அளப்பரிய சேவையாற்றி இன்று 13.08.2020 ஓய்வு பெற்றார் எம் கௌரவ அதிபர் திருமதி நாஜிபா ஹம்ஸா.


திருமதி நாஜிபா ஹம்ஸாவின் சேவைக்காலம் கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொற்காலம்.

சிறந்த முகாமையாளராக, நிர்வாகியாக, நெறிப்படுத்துனராக, ஆலோசகாராக, வழிகாட்டியாக, தாயாக என பன்முக ஆளுமைகளை தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தார்.குறைந்த வளங்கள் மூலம் உச்ச பயனை பெற்று பாடசாலையின் பௌதீக வளங்களை மேம்படுத்தினார்.
கல்வி துறையிலும்  பாட இணைச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் இவருடைய சேவை காலப்பகுதியில் வலய, மாவட்ட ,மாகாண, அகில இலங்கை ரீதியிலும் பல சாதனைகளை படைத்தனர். 

பாலைவனமாக இருந்த பாடசாலை சூழலை சோலைவனமாக மாற்றியமைத்தார். 

களுத்துறை மண்ணில் பெண் கல்வி மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்குமாக தன்னையே அர்பணித்து பல்துறை சார் வித்தகர்களை உற்பத்தி செய்தார்.அவருடைய காலத்தில் மாணவியாக 13 வருடங்களும் ஆசிரியப் பயிலுநராக ஒரு வருடம் பயிற்சி பெற கிடைத்தமையை அதிஷ்டமாக கருதுகிறேன். 

நான் பாடசாலையில் கால் வைத்த நாள் முதல் இன்றுவரை அவரை கண்டு பயந்ததை விட வியந்ததே அதிகம்.அன்பும் , பண்பும்,நிதானமும், பொறுமையும்,தெளிவும், எப்போதும் முகத்தில் புன்னகையும் கொண்டு விளங்கினார். 

கரையில்லா கல்விதனை
குறையில்லாமல் நாமெல்லாம் பயில 
வகை செய்தவரே....

உம் இதமான பேச்சும்
சேவையின் வீச்சும் 
என்றும் மறவாது 
எம் ஆழ் மனங்களில்..

மனிதரை செதுக்கும் 
மாபெரும் பணிக்காய்
கருமமே கண்ணாய் 
இருந்தவரே...

கடமை தவறாது
மாணாக்கர் பல்துறையும் பயின்று சாதனைகள்
 பல படைக்க
தூணாய் நிமிர்ந்து நின்றவரே....

அதிகாரம் செய்தோ
அதட்டியோ நாம் பார்த்ததில்லை..
அன்பாய் இருந்து காரியம்  சாதிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே....

ஊட்டிய கல்வியாலும் 
காட்டிய வழிகளாலும்
காலங்கள் கடந்தாலும்
சேவைகள் நிலைக்கும்...

உதவிகள் கிடைத்திட 
உரமாய் நின்றவறே
கல்லூரியின் உயர்ச்சிக்கு ஊன்றுகோலானவரே...

பண்போடு பாசமும் 
தந்தீர்...
உம் நேரிய சேவையால் 
உருவாகிற்று சீரிய சமூகம்...

வாழ்க பல்லாண்டு
நிஜத்திலும் நினைவிலும் உம் நாமம் நிலைத்திருக்கும்...

ஊடகவியலாளர்
தஸ்லீமா காதர்
களுத்துறை.

No comments