புதிய அரசாங்கத்தின் பட்ஜட் நவம்பரில் முன்வைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத்திட்டம் 2020 நவம்பரில் முன்வைக்கப்படும் என அரசாங்க உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டமே டிசம்பரில் இவ்வாறு முன்வைக்கப்படவுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாளை மறுதினம் அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்.

புதிய ஆட்சி அமையப்பெற்ற பின்னர் இடைக்கால கணக்கறிக்கையே முன்வைக்கப்படும். 2020 ஆம் ஆண்டுக்காக பட்ஜட் சமர்ப்பிக்கப்படாது. ஏனெனில் அவ்வாண்டு முடிவடைவதற்கு குறுகிய காலப்பகுதியே உள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 2020 நவம்பரில் முன்வைக்கப்படும் என்று ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

நவம்பர் பட்ஜட் முன்வைக்கப்பட்ட பின்னர் விவாதம் ஆரம்பமாகி டிசம்பர் இறுதியில் அது நிறைவேற்றப்படும்.sorku

No comments