அன்பார்ந்த மாணவர்களே/பெற்றோர்களே


நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக சகல பாடசாலைகளும் 2020.03.13ம் திகதி மூடப்பட்டதை யாவரும் அறிவீர்கள்.

அந்தவகையில் மீண்டும் பாடசாலைகள் 2020.07.06ம் திகதி  தரம்-05, O/L, A/L ஆகிய வகுப்புக்களுக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதால் மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி தங்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

COVID-19காலத்தில் மாணவர்கள் பாடசாலையில் கடைப்பிடிக்க வேண்டியவை ஒழுங்குகள்.

1.பாடசாலை வளாகத்தினுள் நுழைந்தவுடன் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல்.

2.ஒவ்வொரு மாணவர்களும் சமூக இடைவெளியைப் பேணி தொற்று நீக்கித் திரவத்தைப் பயன்படுத்தி கைகழுவுதல்.

3.வரும்போது (Face mask) அணிந்து வருவதோடு மேலதிகமாக ஒரு முகக் கவசத்தை தனது புத்தகப் பையினுள் வைத்தல்.

3.சிற்றுண்டிச்சாலை/உணவகம் திறக்கப்படாதபடியால் வீட்டிலிருந்து வரும்போது ஆரோக்கியமான உணவுகளை சமைத்து கொண்டு வருதல். முடியுமானால் கரண்டியைப் பயன்படுத்தி உண்ணல்.

5.உணவு உண்ணுமுன் கைககளை நன்றாகக் கழுவிக்கொள்ளல்.

6.உணவுகள் பரிமாறுவதை தவிர்ப்பதோடு தங்கள் கொண்டுவந்த உணவை மாத்திரம் உண்ணல்.

7.வகுப்பறையினுள் மாணவர்கள் குழுவாக இருப்பதைத் தவிர்த்தல்.

8.கற்றல் உபகரணங்கள் பரிமாறுவதைத் தவிர்ப்பதோடு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடப்புத்தகம்,கொப்பிகள்,எழுதுகருவிகள் போன்றவற்றை முன்கூட்டியே தயார்டுத்தல்.

9.தங்களுக்கு வீட்டில் காய்ச்சல்,தடுமல், இருமல் போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்த்தல்.

10.தங்களுக்கு பாடசாலையில் காய்ச்சல்,தடுமல்,வறண்ட இருமல் ஏற்படும் போது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தல்.

11.மலசல கூடம் செல்லும் தேவை ஏற்படும் போது வகுப்பாசிரியரின் அனுமதியைப் பெற்றுச் செல்லல்.

12.ஆட்டோவில் வருபவர்கள் மூன்று பேருக்கு மேல் ஏறுவதைத் தவிர்த்தல். இதுபற்றி பெற்றோர்கள் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்.

13.மாணவிகளின் ஆடைகள் எப்போதும் சுத்தமாக இருத்தல்.

14.தங்களுக்கு வழங்கப்படும் இடைவேளை நேரங்களில் கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ளல்.

15.பாடசாலையில் வைக்கப்பட்டுள்ள பொதுவான இடங்களில் குடிநீர் அருந்துவதைத் தவிர்ப்பதோடு வீட்டிலிருந்தே குடிநீர் கொண்டு வருதல்.

16.மாணவர்கள் பாடசாலையின் வெளியே விளையாடுதல்,கூட்டமாக நின்று கதைத்தல்,தொடுதல் போன்றவற்றை முற்றாகத் தவிர்த்தல்.

17.பாடசாலை விடும் போது கைகழுவுதல்.

18.தரம்-05மாணவர்களுக்கு பி.ப.1.30மணியளவில் பாடசாலை நிறைவுபெறுவதால் அதுபற்று ஆட்டோ சாரதிகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தல்.

19.பாடசாலை விடும்போது சமூக இடைவெளியைப் பேணி (1m) கலைந்து செல்லல்.

20.மாணவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் பாதணிகளை உரிய இடங்களில் கழற்றி விட்டு தன்னை நன்றாக சுத்தம் செய்து கொள்ளல்.

மாணவச் செல்வங்களே சுகாதார நடைமுறைகளைப் பேணி கொரோனாவை வெற்றி கொள்வோம். பின் கல்விக்கு புத்துயிர் அளிப்போம்.

No comments