மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது


பொதுத் தேர்தல் 2020 இற்கான பிரசார நடவடிக்கைகளை முண்னெடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமாரின் பிரதான தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் இன்று (01 புதன்) திருமலை வீதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் கிறிஸ்னபிள்ளை துறைராஜசிங்கம் கட்சியின் உப தலைவர் பொன்செல்வராஜா, மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களின் ஆதரவுடன் திறந்து வைக்கப்படவுள்ளது. கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய மாணிக்கம் உதயகுமாரை ஆதரித்து இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இன்று காலை 8.00 மணிக்கு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை நிகழ்வும், மு.ப. 9.00 மணிக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாதா கோவிலில் விசேட ஆராதனை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இத்தேர்தல் பிரச்சார அலுவலகம் மு.ப. 9.30 மணிக்கு ஊரணி வெள்ளைக்குட்டியர் சந்தி திருமலை வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் திறந்து வைக்கப்படவுள்ளது. 

No comments