இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயற்திட்டம் உருவாக்கப்படல் வேண்டும். -சிரேஷ்ட சட்டத்தரணி MIM அஸ்வர்-

இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் செயற்திட்டம் எமது சமூகத்தில் இன்னும்
உருவாக்கப்படாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விடயமென சிரேஷ்ட சட்டத்தரணி MIM அஸ்வர் லங்கன்வொய்ஸ் ஊடகத்திற்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.........

அன்மைக்காலமாக பல மாணவர்கள் தங்களது புலமையைப் பயன்படுத்தி மனித சமூகத்திற்கு பயன்தரக்கூடிய பல கண்டுபிடிப்புகளை செய்து எமது பாடசாலை மாணவர்கள் சாதனைகளை படைத்து வருகின்றனர். இருப்பினும் அவர்களை அழைத்து பாராட்டி பரிசு கொடுப்பது போதுமானதாக அமையாது. அவர்களது ஆக்கங்களையும், கண்டுபிடிப்புக்களையும் சந்தைப்படுத்தும் பாரிய செயற்திட்டங்களை உருவாக்கி அவர்களது எதிர் காலம் ஒளிமயமாவதற்குரிய நீண்டகாலத் திட்டங்களை உருவாக்கவும் வேண்டும். 

உயர்தரப் பரீட்சையில் சித்தியைப் பெற்று வைத்தியத்திறை, சட்டத்துறை மற்றும் பொறியியல் துறைகளில் பல்கலைக்கழக அனுமதி அடைத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் இவ்வாறான இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வழங்கப்படாமல் இருப்பது துரதிஷ்டமானது.

இன்றைய உலக சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்பம் என்பது மனித வாழ்விலும், சாதாரண செயற்பாடுகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

 எனவேதான் இவ்விடயத்தில் நாம் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது. 

புதிய கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்தும் செயற்திட்டத்திற்கு ஓர் அமைப்பு இருக்குமாயின் அதனூடாக புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், ஆர்வமுள்ள மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்குரிய வசதி செய்து கொடுக்கவும் முடியும். 

எனவே இது விடயத்தில் அதிகூடிய கவனம் செலுத்துவது பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் தலைமைகளின் பொறுப்பாகும்.

No comments