சிலரது அரசியல் வங்குரோத்து தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி கிளையின் ஊடக அறிக்கை


அகில இலங்கை மக்கள்  காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழுவுடன் தொடர்பு மற்றும் செயற்பாடுகள் அற்ற சிலரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எமது மத்திய குழுவின் உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைவாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர் அந்த வெற்றிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டும் வருகின்றனர். 
ஆனால்............ 
காத்தான்குடி அமைப்பாளர் மற்றும் மத்திய குழுத்தலைவர் பதவிக்கு கடந்த மாதம் 17 05 2020ம் திகதி அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.முகைதீன் சாலி(LLB. R) அவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இல்லாத அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காத்தான்குடி  அமைப்பாளர் மற்றும் மத்திய குழுத்தலைவர் பதவியினை தான் இராஜினாமா செய்வதாக அல்ஹாஜ் ரீ.எல் ஜவ்பர்கான் அவர்கள் 19 05 2020ம் திகதியன்று ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டு இருந்தார். 

(குறிப்பு: இந்த அமைப்பாளர் மற்றும் மத்திய குழு தலைவர் ஆகிய பதவிகள் மத்திய குழுவின் முந்தைய தீர்மானப்படி சுழற்சி முறையில் பகிர்தலிக்கப்பட்ட நான்கு வருட நகரசபை காலங்களுக்குமான உறுப்பினர் நாள்வருக்கும் என்ற அடிப்படையில் முதலாம் வருடம் நகரசபை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட மாஹிர் ஹாஜியார் அவர்கள் மத்திய குழுவின் தலைவராகவும் பிரதம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட இருந்த நேரத்தில் அவர் அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாததன் காரணத்தினால் இரண்டாம் வருட சுழற்சிமுறை நகரசபை உறுப்பினராக கட்சியினால் நியமிக்கப்பட இருந்த எமது முன்னாள் நகரசபை உறுப்பினர் அல்ஹாஜ் ரீ.எல் ஜவ்பர்கான் அவர்கள் நியமிக்கப்பட்டு முதலாம் மற்றும் அவரது இரண்டாம் வருட சுழற்சி முறை நகரசபை உறுப்பினர் காலம் வரையான இரண்டு வருடங்களுக்குமாக பிரதம அமைப்பாளர் மற்றும் மத்திய குழு தலைவர் ஆகிய பொருப்புக்களை செய்து வந்தார் அதன் தொடரிலேயே தற்போதைய மூன்றாம் வருட சுழற்சி முறை நகரசபை உறுப்பினராக கட்சியினால் நியமிக்கப்பட்ட எம்.எஸ்.எம் முகைதீன்சாலி அவர்கள் முன்னாள் நகரசபை உறுப்பினர் ரீ.எல்  ஜவ்பர்கான் ஜே.பீ அவர்களின் அனைத்து  வெற்றிடத்திற்குமாக அவரது மூன்றாம் வருட சுழற்சி முறை நகரசபை பதவிக்காலம் முடியும்வரை பதவி வகிப்பார். 

அதே ஒழுகில் நான்காம் வருட சுழற்சி முறை நகரசபை உறுப்பினராக கட்சியினால் நகரசபைக்கு நியமிக்கப்படவுள்ள எஸ்.எம் சப்ரி அவர்கள் தற்போதைய மூன்றாம்வருட உறுப்பினரான முகைதீன் சாலி அவர்கள் தற்போது வகித்து வரும் அனைத்து பதவிகளுக்கும் இதன் தொடரில் பதவி வழியாக நியமிக்கப்படுவார்.


அதேபோன்று கடந்த வருடம் மத்திய குழுவின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து 2019ம் ஆண்டு தானாக பதவி விலகிய அல்ஹாஜ் MC ஜலால்தீன் ஹாஜியார் அவர்கள் அவரது பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாக கடந்த 20 05 2020ம் திகதி ஒரு ஊடக அறிக்கை ஒன்றினை அல்ஹாஜ்  ஜவ்பர்கான்அவர்கள் அவரது முகநூலில்  வெளியிட்டு இருந்ததுடன் அந்த செய்தியை வெளியிடுமாறு காத்தான்குடியிலுள்ள சில ஊடகவியலாளர்களுக்கும் அவரே அதனை தெரிவித்தும் இருந்தார்.


இதுபோன்று செயற்பாடற்று இருந்தவர்கள் இடை நிறுத்தப்பட்ட பலர் இராஜினாமா செய்ததாக எதிர்வரும் காலங்களில் ஊடக செய்திகள் வெளிவரும் காரணம் ஒரு சிலரது அரசியல் வங்குரோத்தினை மூடி மறைப்பதற்கும் புதிதாக ஒரு அரசியல் முகாமுக்குள் ஆதரவாளர்களுடன் சிலருடன் இணைவதாக காட்டிக் கொள்வதற்கும் அங்கு அரசியல் மற்றும் இன்னோறன்ன சில இலாபங்களை அடைந்து கொள்வதற்கும்  இல்லாத பதவிகளை இராஜினாமா செய்யும் நாடகமும் சில நாட்களாக  நடந்தேறுகிறது.

எமது கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்ட பலரது வீடுகளுக்குச் சென்று நீங்கள் வகித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதவியினை இராஜினாமாச் செய்ததாக தெவித்து அறிக்கை விடுமாறு ஒரு ஆசாமி வீடு வீடாக அழைந்து திரிவதாகவும் கடந்த சிலநாட்களாக அறிந்து கொள்ள முடிகின்றது.

எனவே இது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கினை நலிவடையச் செய்வதற்கும் புதிய அரசியல் முகாமில் தன்னை உத்தமனாகவும் தியாகியாகவும் காட்டிக் கொண்டு தனது கட்சித்தாவலை ஊருக்காக செய்ததாக  மேற்கொள்கின்ற ஒரு அரசியல் அஜந்தாவிற்கு உட்பட்ட  நாடகமாகவே இதை பார்க்க கூடியதாக முடிகிறது.

எனவே எவரது அரசியல் நாடகத்தாலும் எமது கட்சியின் வளர்ச்சியையும் தடுத்து விட முடியாது யார் யார் எந்த அரசியல் முகாமுக்கு பொறுத்தமோ அல்லாஹ் அவர்களை அந்த அரசியல் முகாமுக்கே கொண்டு செல்வான் அல்ஹம்துலில்லாஹ்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 
காத்தான்குடி
ஊடகப்பிரிவு
05.06.2020

No comments