அமெரிக்க கருப்பு இனத்தவர்களிடம் கற்றுக்கொள்ள; நமக்கு நிறையவே இருக்கின்றன.............


அமெரிக்காவில் ஒரு கருப்பு இனத்தைச் சேர்ந்தவர் - அநியாயமாக கொல்லப்பட்டதை எதிர்த்து - அவர்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி - கொல்லப்பட்டவருக்காக நியாயம் கேட்கின்றனர்.

அது வெள்ளையர் ஆதிக்கத்திற்கு (White Supremacy) எதிரான போராட்டம். 
கருப்பினத்தவருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டம். 

ஒருவர்தான் கொல்லப்பட்டார். 
ஆனால், உலக வல்லரசான அமெரிக்காவையே உலக்குமளவிற்கு - அவர்களின் போராட்டம் அமைந்திருப்பது கண்டு - அவர்களுக்கு ஒரு “சல்யூட்” அடிக்காமல் இருக்க முடியாது. 

அவர்களின் மீதான கண்ணியம் நம்மை அறியாமலே உள்ளத்தில் வளர்ந்து நிற்கிறது.

அவர்களுக்கு நியாயம் கிடைக்க மனதார பிரார்த்தனை செய்வோம்!
ஒடுக்கப்படும் எந்த இனத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்!
அது எங்காக இருந்தாலும் சரியே!

இதேபோன்றுதான் இலங்கையிலும் நமது இனத்திற்கு எதிராக அநியாயங்கள் இழைக்கப்படுகின்றன. குறிப்பாக;
✔️ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியமை
✔️ஒரு முஸ்லிம் கூட அமைச்சரவையில் சேர்க்கப்படாமையை 
✔️விவாக விவாகரத்து சட்ட நீக்க பிரேரணை சமர்ப்பித்தமை
✔️வெட்டுப்புள்ளியை 12.5% ஆக உயர்த்தி முஸ்லிம் MPகளை குறைக்க முயற்சிக்கின்றமை
✔️பெரும்பான்மை விரும்பாத தீர்வை சிறுபான்மைக்கு வழங்க முடியாதென நிலைப்பாட்டிலுள்ளமை 
✔️பெரும்பான்மை விரும்பிய வண்ணமே முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கின்றமை
✔️ஒட்டு மொத்த மத்ரசாக்களையும் இழுத்து மூடும் கருத்துருவாக்கப்பட்டுள்ளமை
✔️முஸ்லிம்களின் ஏற்றுமதி பொருளாதாரம் நசுக்கப்படுகின்றமை
✔️ஒரே ஒரு முஸ்லிம் GA (வவுனியா) பறிக்கப்பட்டமை
✔️ராகமை - மகர பள்ளிவாசலில் சிலை வைத்து - விடுதியும் அமைக்கப்பட்டமை
✔️நெலுந்தெனிய பள்ளிவாயில் வளவில் சிலை வைக்கப்பட்டமை
✔️முஸ்லிம்கள்தான் இந்த நாட்டிற்கு கொரோனாவை கொண்டு வந்ததை போன்ற மாயையை ஏற்படுத்தப்படுகின்றமை
✔️முஸ்லிம்கள்தான் ஊரடங்கை அதிகம் மீறும் தேசப்பற்றற்றவர்கள் என்ற கருத்துருவாக்கப்படுகின்றமை 
✔️கொரோனாவால் முஸ்லிம் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் - அக்கிராமத்தையே மூடியமை
✔️அரசினால் நியமிக்கப்பட்ட "கொரோனா நடவடிக்கை குழுவில்" ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படாமை
✔️தொடர்ச்சியாக முஸ்லிம் தலைமைகள் ஏதோ ஒரு வகையில் குறிவைக்கப்படுகின்றமை
✔️கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன சின்னங்களை மட்டும் பாதுகாப்பதாக முஸ்லிம் நிலபுலங்களின் மீது குறிவைக்கப்படுகின்றமை
எனத்தொடரும் அநியாயங்களை தட்டிக்கேட்க நாம் ஏன் மறந்திருக்கிறோம்?

அதிலும் குறிப்பாக - உலகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு - நூற்றுக்கு நூறு வீத மாற்றமாக - முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விடயத்தில் கூட - போதியளவு போராடாமல் ஏன் அமைதி காக்கிறோம்?

நமது மதச்சுதந்திரத்திற்காகக் கூட ஜனநாயக வழியில் போராட நாம் தயாரில்லையா?

அவ்வளவு பயந்துவிட்டோமா?
அல்லது 
அக்கறை இல்லையா?
அல்லது 
ரோசம், சூடு, சொரனை அற்றப்போனதா?

அதுபுறமிருக்க, இவை எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும் நம்மில் சிலர் இருப்பதை என்னவென்று சொல்வது? 
தமது இனத்திலேயே அக்கறை இல்லாத இந்த ஜென்மங்களை எப்படி அழைப்பது? 
இவர்கள் முஸ்லிம்கள்தானா?

அமெரிக்க கருப்பினத்தவர்களிடம் கற்றுக்கொள்ள இவர்களை அனுப்ப வேண்டும். 
இனம் என்றால் என்ன என்பதை அவர்களிடம் இந்தக் கயவர்கள் தெரிந்துகொள்ளட்டும். 

அநியாயமாக கொல்லப்பட்ட ஒருவருக்காக அவர்கள் அனைவருமே களத்தில் இறங்கி நிற்பதை கண்டு - இதற்குப் பிறகாவது இவர்கள் திருந்தட்டும்.

அமெரிக்க கருப்பு இனத்தவர் போராட்டம் வெற்றி பெறட்டும்!

  - ஏ.எல். தவம் -


No comments