மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜுன் 12 ஆந் திகதி தொடக்கம்; 2020 ஜுன் 19 ஆந் திகதி வரையும் 20 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ம் ஆண்டு ஜுன் 12 ஆந் திகதி தொடக்கம்; 2020 ஜுன் 19 ஆந் திகதி வரை 20 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.


மேலும் இந்தவாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 05 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.. அது போன்று கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை பிரிவில் 3 நோயாளர்களும், ஆரையம்பதி பிரிவில் 2 நோயாளர்களும், வாழைச்சேனை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 20 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.


வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுனதீவு, காத்தான்குடி, வெல்லாவெளி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே. குணராஜசேகரம் தெரிவித்தார்.


கடந்தவாரம் 20,பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் நாட்டில் பொதுவாக டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments