விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல் நாளை

வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வௌியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (08) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த கலந்துரையாடலின் போது  தேர்தலுக்கான புதிய திகதியை இந்த வாரத்திற்குள் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.sorlnw

No comments