காத்தான்குடி தாருஸ்ஸலாம் வித்தியாலய மாணவர்களின் சாதனை.


ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்

மட்டக்களப்பு மத்தி வலயம் காத்தான்குடி கோட்ட பாடசாலைகளில் ஒன்றான மட்/மம.தாருஸ்ஸலாம் வித்தியாலய மாணவர்கள் இறுதியாக இடம் பெற்ற கோட்டமட்ட பாடசாலைகளுக் கிடையிலான மெய்வல்லுநர் (kids Athletic) போட்டியில் 
(தரம் 3 கலவன் மாணவர்கள்)
முதலாம் இடத்தினை   
(Gold Medal) பெற்று  சாதனை படைத்துள்ளனர். 

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதனால்  மேற்படி போட்டியின் இறுதி முடிவு (FinalResult) அறிவிக்கப்படாத நிலையில் தற்போது Whatsup மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாக அதிபர்  AL.முனீர் அஹமட்
தெரிவித்தார்.

மேற்படி மாணவர்களின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பாடுபட்ட வித்தியாலயத்தின் அதிபர் AL.முனீர் அஹமட், ஆசிரியைகளான 
Mrs.BSU.Sahabdeen,
Mrs.FFM.Azhar மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கும் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்

கடந்த 2017ம் ஆண்டு  04 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பாடசாலையானது தற்போதைய அதிபர்.AL. முனீர் அஹமட்டின் சிறந்த செயற்பாடு,முயற்சி, அர்ப்பணிப்பு காரணமாக இன்று.74 மாணவர்களுடன் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளிலும்  பாடசாலை வளர்ச்சிபெற்று வருகின்றமை விசேட அம்சமாகும்.


No comments