“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்கள் விஜயம்.

“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்கள் விஜயம்.

கொழும்பு One Galleface - PVR திரையரங்கில்  (28) பிற்பகல் திரைப்படம் திரையிடப்பட்டது. 


சரத் கொத்தலாவல மற்றும் குமார திரிமாதுர ஆகியோரின் இணை
இயக்கத்தில் உருவான “த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள்
அமைச்சர் பந்துல குணவர்தன, ரவிந்திர குருகே மற்றும் எச்.டி.பிரேமசிறி ஆகியோர் ஆவர்.


ஜூலை 02ஆம் திகதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் “த நியுஸ் பேப்பர்”
திரைப்படம் திரையிடப்படுவதுடன், அன்று காலை 10.30 முதல் காட்சியை இலவசமாக
பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படும்.


கொவிட் ஒழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற சுகாதார ஊழியர் குழுவினர், முப்படையினர்,
பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை
பயன்படுத்தி ஒருமுறை இத்திரைப்படத்தை இலவசமாக பார்வையிட முடியும்.


ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத்
உள்ளிட்ட பலர் திரைப்படத்தின் விசேட காட்சியை பார்வையிட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget