சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்பு.

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கிடைத்த "குறுதித்தட்டுப்பாடு" என்ற தகவலினை அடுத்து சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் உதிரத்தி னை வழங்கினர்.


காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும்
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் "தேசபந்து" MIM.ஹாரிஸ்.JP தலைமையில் (13)  பதிய காத்தான்குடி  பதுறியா வித்தியாலயத்தில் (8.30.AM-2.30.PM)வரை இடம் பெற்ற மேற்படி இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதினை காண முடிந்தது.


மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்ட
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் செயற்பாடானது
அதிகமானவர்களின் பாராட்டுக்களையும் பெற்ற காரணமாக அமைந்திருந்தமை விசேட அம்சமாகும்.


கொரோனாவின் பின் காத்தான்குடி சமூகம் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டினில் மட்டக்களப்பு இரத்த வங்கிக்கு (Blood bnak) க்கு உதிரத்தை வழங்கியமைக்காக வைதியர்கள், தாதியர் குழாம் உட்பட அனைவரும் தங்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
No comments