நாட்டுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் பயணத்தை எவராலும் மாற்றியமைக்க முடியாது- சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரர் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் இப்பயணத்தை எவராலும் மாற்ற முடியாதென அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க லங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரர் தெரிவித்தார்.

பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தூற்றிக்கொள்ளும் அரசியல் மேடைகளுக்கு அப்பால் தமது கொள்கையை மிகச் சரியாகவும் அச்சமற்றும் முன்வைத்த ஒரேயொரு தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே என தேரர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்கள் இன்று (21) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க லங்காராம விகாரைக்கு சென்று விகாராதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரரை சந்தித்தபோதே தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அவர்களின் வாழ்க்கையிலிருந்து பௌத்த மதத்தின் மும்மணிகளுக்கு கௌரவமளிக்கும் விதத்தையும் மேலும் பல விடயங்களையும் கற்றுக்கொள்வதற்கு முடியுமென தம்மஜோதி தேரர் தெரிவித்தார்.
கடந்து சென்ற சில மாதங்களில் சரியான திசையில் நாட்டைக் கொண்டுசென்ற ஜனாதிபதி அவர்கள், மகாசங்கத்தினர் மற்றும் மக்களின் நம்பிக்கைக்குள்ளாகியுள்ளார் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.

பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்த தம்மஜோதி தேரர், நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தார்.
லங்காராம வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரையை வழிபட்டதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள், மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களும் ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள், அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க இசுறுமுனிய விகாரையின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய மதவ ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

விகாரையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.

ஜனாதிபதி அவர்கள் விசேட விருந்தினரின் நினைவு பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். விகாரை பற்றிய வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை உள்ளடக்கிய பல புத்தகங்களையும் விகாராதிபதி ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கிவைத்தார்.

விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க நூதனசாலை, குளம் மற்றும் புனித இடங்களை தரிசித்தார்.
இசுறுமுனிய ரஜமகா விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார்.

மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

No comments