அக்கரைப்பற்றைச் சேர்ந்த மட்டக்களப்பு விவசாயப் பணிப்பாளர் முகம்மது இக்பால் அரச பணியிலிருந்து ஓய்வு


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளராக கடமையாற்றிய அக்கரைப் பற்று பகுதியைச் சேர்த யாசீன்பாவா முகம்மது இக்பால் தனது 28 வருட சேவையின் பின்னர் சுயவிருப்பத்தின் பெயரில் தனது 55வது வயதில் அரச பணியிலிருந்து ஓய்வு நிலைக்குள்ளாகியுள்ளார்.

அக்கரைப்பற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான பணிப்பாளர் இக்பால் யாசீன்பாவா சுகாரா உம்மா தம்பதிகளின் புதல்வாரும், கிழக்கு பல்கலைக் கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் பட்டதாரியுமாவார்.
1992ல் மகா இலுபள்ளம விவசாய அராய்ச்சி நிறுவகத்தில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக தனது அரச பணியை ஆரம்பித்த இக்பால் 1999 முதல் 2018 வரை பத்தளகொட மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவி விவசாய ஆராய்ச்சிப் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து இன்றுவரை இரண்டு வருடங்கள் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சேவையை பூர்த்தி செய்ததன் பின்னர் சுயவிருப்பத்தின் பெயரில் ஓய்வு நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
இவரின் ஓய்வை முன்னிட்டு பிரிவுபசார நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர். ஏ. நவேஸ்வரன், தேசிய உரச் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். சீராஜுன் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இவரின் சேவையைப் பாராட்டி திணைக்களப் பணியாளர்களால் தங்கப்பதக்கமும் ஞாபகச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments