பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான செயற்பாடுகள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன. காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் கலாவுதீன்.

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்

காத்தான்குடி கோட்ட பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான செயற்பாடுகள்  மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருவதாக காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் MM.கலாவுதீன் தெரிவித்தார்.


Covid 19 கொரோனாவின் காரணமாக மூடப்பட்ட  பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு, சுகாதார துறையினரின்  அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. 


ஒவ்வொரு பாடசாலைகளை களினதும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து,  
சுகாதார முறைப்படி வைத்திருப்பது  ஒவ்வொரு அதிபர்களின் பொறுப்பும், கடமையுமாகும். அந்த விடயம் மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருவதனைக் காணக்கூடியதாய் உள்ளதாக தெரிவித்தார்.


மேலும் தெரிவிக்கையில்.....


கோட்ட கல்விப் பணிப்பார் என்ற வகையில் பாடலைகளுக்குச் சென்று அங்கு இடம் பெறும் பணிகளை மேற்பார்வை செய்தது மாத்திரமின்றி அவர்களில் ஒருவனாக தானும் இருந்து சிரமதானப் பணிகளில் ஈடுபட முடிந்ததாகவும் தெரிவித்தார்.


இதனடிப்படையில் காத்தான்குடி பதுரியா வித்தியாலயம்,சுகதா வித்தியாலயம், மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), அல்ஹிறா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை மேற்பார்வை செய்ததுடன் 


பாடசாலையின் முன்னேற்றத்தில் அதி கூடிய அக்கரை செலுத்தி வரும் அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், SDC உறுப்பினர்கள், பெற்றோர் சமூகம் ஆகியோர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக 
காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் MM.கலாவுதீன்  தெரிவித்தார்.No comments