வேட்புமனுவில் கையொப்பமிட்ட ஜீவன் தொண்டமான்

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்   (04) வியாழன் மாலை 05.00 மணி சுபவேளையில் CLF கட்டடத் தொகுதியில் கையொப்பமிட்டார்.

மற்றைய நுவரேலியா மாவட்ட வேட்பாளர்களான மருதபாண்டி ராமேஸ்வரன்,சக்திவேல் மற்றும் இ.தொ.கா கட்சி உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட இ.தொ.காவின் உயர்மட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த நிலையில் கடந்த 26ம் திகதி மாரடைப்பினால் காலமானார்.
அவரின் மறைவின் பின்னர் வெற்றிடமான இடத்தில்  போட்டியிட அவரது மகன் ஜீவன் தொண்டமானை இ.தொ.காவின் உயர்மட்ட பிரமுகர்கள் பரிந்துரைத்திருந்த நிலையில் ஜீவனிடம் வேட்புமனுவில் இன்றையதினம் பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் குழுவினால் கையொப்பம் பெறப்பட்டது.

No comments