கோழியிறைச்சி மற்றும் முட்டையின் விலை உயர்வு. சிரமத்திற்குள்ளான மக்கள் !

நாட்டின் பல பிரதேசங்களில், தோல் நீக்கப்பட்ட கோழியிறைச்சி கிலோ ஒன்றின் சில்லறை விலை 630 ஆக உயர்வடைந்துள்ளது.

சில இடங்களில் தோல் நீக்கப்பட்ட கோழியிறைச்சி கிலோ ஒன்றின் விலை 650 ரூபா-700 ரூபாவிற்கு இடையில் விற்கப்படுகிறது.
இரண்டு வாரங்கள் எனும் குறுகிய காலத்தில் 150 ரூபா அளவில் அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அமசமாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோல் நீக்கப்பட்ட கோழியிறைச்சி கிலோ ஒன்றின் விலை 480 ரூபாவாகும். அது ஒரு கிழமையில் 550 ரூபாய்வரை அதிகரித்தவுடன் அடுத்த வாரத்தில் சில நாட்களில் வேகமாக உயர்வடைந்ததுடன் 630ரூபாவாக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் உற்பத்திகள் குறைவடைந்ததால் கோழியிறைச்சி பற்றாகுறை ஏற்பட்டதுடன் இறக்குமதி வரி அதிகரிப்பால் கோழியின் விலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் முட்டையின் விலை 20 ரூபாவாக அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு முட்டையின் விலை 13 - 15 ரூபாவாக காணப்பட்டது.
கோழி மற்றும் முட்டை விலை வரும் நாட்களில் தொடர்ந்து உயரும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.sor.lnw

No comments