ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.


ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற 5வது மாபெரும் இரத்ததான முகாம் SLTJ பள்ளிவாயலின் தலைவர் JM.பைரூஸ் தலைமையில் பள்ளிவாயலில்  இடம் பெற்றது.


இன்று (12.06.2020 வெள்ளி) காலை 09.00 மணி தொடக்கம் பி.ப.02.00 மணி வரை இடம் பெற்ற மேற்படி இரத்ததான முகாமில் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 31 பேர்   கலந்து கொண்டு தங்கள் உதிரத்தை வழங்கியுள்ளனர்.


மேற்படி முகாமில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டாக்டர் பிரபா சங்கர் உட்பட தாதியர் குழுவினர்களும்  முகாமில் பணியில் ஈடுபட்டிருந்ததினை காணமுடிந்தது.


மேற்படி  முகாமில் SLTJ காத்தான்குடி கிளையில் தலைவர், செயலாளர் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments