காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்திற்கு நிரந்த அதிபர் ஒருவரை நியமித்து தருமாறு பெற்றோர் சமூகம் வேண்டுகோள்.

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்.

Covid19 கொரோனாவின் காரணமாக மூடப்பட்டிருந்த 
பாடசாலைகள்
அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைய  கட்டம் கட்டமாக மீள ஆரம்பிக்கப் பட்டுள்ளதனால்  காத்தான்குடி அல்அமீன் வித்தியாலயத்திற்கு நிரந்த அதிபர் ஒருவரை நியமித்து தருமாறு பெற்றோர் சமூகம் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர்  
MM.கலாவுதீனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இது தொடர்பான சந்திப்பு காத்தான்குடி கோட்ட கல்வி பணிமனையில் இடம் பெற்றது.

மேற்படி சந்திப்பின் போது பெற்றோர் சமூகம் சார்பாக  புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாயல் (அல் அக்சாவின்)              முன்னாள்  தலைவர், சமூக சேவையாளர் அல்ஹாஜ்  KLA.றஹீம் JP,  
SDC,இன் முன்னாள் உறுப்பினர் சமூக சேவையாளர் அல்ஹாஜ் Ml.பத்குல்கரீம்.JP ஆகியோர் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி அல்அமீன் வித்தியாலயமானது பெண்கள் பாடசாலை என்பதனால் மேற்படி பாடசாலைக்கு      பொருத்தமான, அதிபர் தரத்திலுள்ள நிரந்தர அதிபர் ஒருவரை நியமித்து தருமாறு இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்படி விடயம் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருடன் தான் கலந்தாலோசித்து தீர்வு பெற்று தருவதாக காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் 
MM.கலாவுதீன் தெரிவித்துள்ளார்,

பாடசாலை தொடர்பான பல முக்கிய விடயங்கள் இதன் போது பேசப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
 

No comments