எல்லா விடயத்தையும் தாஜுதீன் மரணம் போன்று அரசியல் செய்ய வேண்டாம் - நாமல்

சமூகத்தில் ஏற்படும் சம்பவங்களை அரசியல் மயமாக்குவதன் மூலம் அரசியல் நன்மைகளைப் பெற அன்று முதல் எதிர்க்கட்சி முயற்சித்து வருவதாகவும் இதற்கு சிறந்த உதாரணம் வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொது தேர்தல் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் இதனை குறிப்பிட்டுள்ளார்.

"அந்த ஐக்கிய தேசிய கட்சி கடந்த எதிர்க்கட்சி காலத்திலும், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் என்ன செய்தார்கள் என கண்டோம். இதுபோன்று சம்பவங்களை எடுத்துக்கொண்டு அரசியல் செய்தார்கள். அந்த வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம். காவல்துறை அதிகாரிகள்  எந்த காரணமும் இல்லாமல் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை வீணாக அரசியல் மயமாக்கி அரசியல் ஆதாயத்தைப் பெற முயற்சிக்கின்றனர். இதைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று நாங்கள் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
போலீசார் தெளிவான விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையின் முடிவுகளின்படி சட்டம் செயல்படுத்தப்படும். ஒரு சம்பவம் நடந்தால் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாங்கள் இருமுறை யோசிப்பதில்லை. இன்று என்ன நடக்கிறது என்றால், இவை அனைத்தும் அரசியல் நன்மைகளைப் பெற பயன்படுத்தப்படுகின்றன" என அவர் குறிப்பிட்டுள்ளார்.sorlnw

No comments