மஹிந்தவின் வேலை வரையறுக்கப்பட்டது. ஜனாதிபதியின் தலையீடு சரி - சுசில்

மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் என்பதால் அவரின் வேலைகள் வரையறுக்கப்பட்டது எனவும் அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கியமை சரியானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொது தேர்தல் வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மத்தியவங்கி தொடர்பான விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ இருக்கையில் ஜனாதிபதி அனைத்து விஷயங்களிலும் தலையிட வேண்டுமா என்று நேற்று ஒரு ஊடகவியலாளர்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.sorlnw

No comments