புதியசிந்தனை வாக்களித்து மறுநாளே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும்!


எதிர் வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி வாக்களிப்பு முடிவடைந்ததும்  ஆகஸ்ட்  6 ஆம் திகதி மறுநாள் காலையிலேயே இம்முறை வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றபின்னர், வாக்குப் பெட்டிகள்  வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, எண்ணப்பட்டு அன்றைய தினம் நள்ளிரவுக்குள் முதல் முடிவு அறிவிக்கப்படும்.

ஆனால் இம்முறை வாக்களிப்பு தினத்தன்று வாக்கெண்ணும் பணி இடம்பெறாது எனவும், மறுநாள் காலை ஆரம்பிக்கப்பட்டு அன்று நள்ளிரவுக்குள் முடிவுகளை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் ஆணைக்குழுவின் தவிசாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
ஆகஸ்ட் 5 ஆம் திகதி வாக்களிப்பு முடிவடைந்ததும், வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துவரப்படும் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும். நிலையத்துக்கு பொறுப்பான அதிகாரியால் ‘சீல்’ வைக்கப்படும். அத்துடன், அதிகாரிகளின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணமும் வாக்கு பெட்டியில் ஒட்டப்படும். அதன்பின்னர் வாக்கு பெட்டி படமெடுக்கப்படும்.

மறுநாள் காலை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு சென்று வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாகவா இருந்தன என்பது உரிய வகையில் உறுதிப்படுத்தப்படும்.

அதேவேளை, விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை 7, 8 ஆம் திகதிகளில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.” – என்றார் மஹிந்த தேசப்பிரிய.sorlnw


No comments