பள்ளிவாயல்களை மீளத்திறப்பது தொடர்பில் விசேட கூட்டம்


பள்ளிவாயல்களை தொழுகைக்காக மீளத்திறப்பது தொடர்பான பள்ளிவாயல் நிருவாகி களுடனானா விசேட கூட்டம் இரண்டு கட்டங்களாக  (12) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மெத்தைப்பள்ளியிலும், சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலிலும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிவாயல் சார்பிலும் அதன் தலைவர், செயலாளர்,பிரதம பேஷ்இமாம், முஅத்தினார் என நால்வர் கட்டாயம் கலந்துகொள்ளுமாறும் ஒவ்வொரு பள்ளிவாயல்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பள்ளிவாசல்களின் முஸ்லிம்நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா என்பன இணைந்து இந்த விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாயல்களை தொழுகைக்காக மீளத்திறப்பது தொடர்பில் ஊடகங்களில் மாத்திரமே தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் சுகாதார அமைச்சிலிருந்தோ பொலிசாரிடமிருந்தோ உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் இதுவரை வெளிவராத நிலையில் பள்ளிவாயல்களை முறையான ஏற்பாடின்றித் திறப்பதிலுள்ள சங்கடங்களைத் தவிர்ப்பதற்கே இந்த விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படும் பள்ளிவாயல் நிருவாகிகள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளவும். 0777381713, 0770174027.

SHM. அஸ்பர் JP
நகரமுதல்வர்
நகரசபை
காத்தான்குடி

No comments