ACMC, NFGG இடையிலான புரிந்துணர்வு கலந்துரையாடல் காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம் பெற்றது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி ஆகிய இரு கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு கலந்துரையாடல் ஒன்று கடந்த (20.06.2020  சனிக்கிழமை இரவு)  காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம் பெற்றது.


மேற்படி சந்திப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளருமான MSS.அமீர் அலி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளரும், வேட்பாளருமான பொறியியலாளர் MM.அப்துர் றஹ்மான் உட்பட  இரு கட்சிகளையும் சேர்ந்த 190 க்கும் மேற்பட்ட
முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய 
முன்னாள் இராஜாங்க அமைச்சர் MSS.அமீர் அலி......


கடந்த 15 வருடங்களாக மேற்கொண்ட ஹலாலான முயற்சிகளுக்கும் ரமழான் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டு செயற்பாடுகளுக்கும் உபகாரமாக இந்த கூட்டணியை இறைவன் பரிசளித்துள்ளதாக  
முன்னாள்அமைச்சர்  MSS.அமீர் அலி
தெரிவித்துள்ளார். 

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்............

வருங்காலம் காத்தான்குடிக்கு ஒரு பிரதிநிதி ஏறாவூருக்கு ஒரு பிரதிநிதி கல்குடாவுக்கு ஒரு பிரதிநிதி என்ற நிலை மாறி எல்லோருக்கும் ஒன்று என்ற நிலையே மிகுதியாக வந்து நிற்கும் எனவும் இந்த நிலைகளில் இருந்து பாதுகாப்புப் பெற தன்னால் கடந்த காலத்தில் மேற்கொப்பட்ட செயற்பாடுகளையும் திட்டமிட்டு இல்லாமல் செய்தததையும் நினைவுபடுத்தினார். 


இது தொடர்பாக மேற்கோள் காட்டிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடந்த 2008ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஒன்று இரண்டு பதினொன்று மூலமாக சகோதரர் ஹிஸ்புல்லாஹ், சகோதரர் ஜவாஹிர் ஷாலி, சகோதரர் சுபைர் ஹாஜியார் என மூன்று ஊர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை பெற்றெடுத்தும் அந்த கூட்டை திட்டமிட்டு இல்லாமல் செய்தமையையும் நினைவூட்டினார். 


2015ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தான் தோற்பேன் என்று தெரிந்திருந்தும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுடன் களமிறங்கி ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் காக்கின்ற பிரயத்தனத்தையும் ஊர்வாதம் பாராது தான் மேற்கொண்டதையும் தேசியப்பட்டியல் உரிய காலப்பகுதியில் கிடைக்கபெறாததையும்  நினைவுபடுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் இம்முறையும் கல்குடா சமூகம் ஒன்று இரண்டாகும் என்ற வாசகங்களுடன் ஊர்வாதங்களை துடைத்தெறிந்து சுவரொட்டிகளை கல்குடா பூராக ஒட்டியிருப்பதாகவும்  தெளிவுபடுத்தினார். 


அமீர் அலி என்பவர் அரசியலுக்குள் வந்தது தற்காலிக ஏற்பாடு என கூறிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் என்ன விலை கொடுத்தேனும் பதவிளை பெற்றுவிட வேண்டும் என்கிற உக்கிர போராட்டத்துக்கு தான் தயாராக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். 


இம்முறை பொதுத் தேர்தலில் சகோதரர் ஹிஸ்புல்லாதான் வேண்டும் என்ற நிலையில் இருபதாயிரம் வாக்குகளை பெற்றாலும்  நஷ்டமே ஏற்பட்டு போகும்  என குறிப்பிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்  குறைந்த பட்சம் 10,000 வாக்குகளை வழங்கி நல்லாட்சிக்காண தேசிய முண்ணணியின் பிரதி தவிசாளர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மானை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது காத்தாண்குடி மக்கள் காலத்திற்கு ஏற்றவாறு மேற்கொள்ளும் மிகச்சிறந்த முடிவாகும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.


பள்ளிவாயல்கள் மீதும் குர்ஆன் மீதும் பொய்ச்சத்தியம் செய்து அரசியல் செய்கிறவர்களுக்கும் இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாக பொதிகளையும் பணங்களையும் வழங்குபவர்களுக்கு மக்கள் இம்முறை வாக்களிப்பார்களாக இருந்தால் நல்ல தலைமுறையினர் தேர்தலில் களமிறங்கமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு குடு வியாபாரிகளும் போதை மாபியாக்களும் பணத்தின் மூலம் ஆளுகின்ற கலாச்சாரம் சந்ததிகள் மீது சாட்டிவிடப்படும் சூழ்நிலை உருவாகி விட்ககூடும் என்பதால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 


இந்த விடயங்களை எல்லாம்  மூத்த உலமாக்கள்,புத்திஜீவிகள்,சுயதொழிளாளர்கள், விவசாயிகள் என அனைவரும் சற்று புருவத்தை அகட்டி யோசனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


எதிர்வரும் பாராளுமன்றத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட  சாதுர்யமான நல்ல தலைவர்கள் அனுப்பப்படவேண்டும் என குறிப்பிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எதிர்கால பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு  பெரும்பான்மை மொட்டு அணிக்கு சில வேலைகளில் கிடைத்தால் முஸ்லிம் தனியார் சட்டங்களில் கைவைக்கப்படும் என்ற அச்சமும் இருப்பதால் ஆளுமையும் திறனும் கொண்ட நல்ல தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.


No comments