ஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை (6) புதன்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைக்காக கொழும்பு நான்காம் மாடிக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெடி விபத்து ஒன்றில் சஹ்றானின் சகோதரரான முஹம்மது ரிஸ்வான் காயமடைந்து வைத்தியசாலைக்கு செல்லாமல் மறைந்து கொண்டு முகாமில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவ உதவிகள் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே அரச ஸ்தாபனம் ஒன்றில் கடமையாற்றி வரும் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.sor/vk

No comments