அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும், துக்கமும் அடைகின்றேன்" கலாநிதி_ஹிஸ்புழ்ழாஹ்


"அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும், துக்கமும் அடைகின்றேன்"
#முன்னாள்_கிழக்கு_மாகாண_ஆளுநர்_கலாநிதி_ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்துள்ளார்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸுனுடைய தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானுடைய மரணச் செய்தி என்னை மிகுந்த ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். எப்பொழுது மலையகத்திற்குச் சென்றாலும் அன்பாக வரவேற்று மலையக மக்களுடைய அபிவிருத்தி மற்றும் அவர்களின் தேவைகள் பற்றி என்னோடு அளவளாவி அவர்களுக்காகவே சிந்திக்கும் ஒரு பண்பான ஆளுமையுள்ள மனிதராக திகழ்ந்தவர்.
நல்ல நண்பர் நாங்கள் மிக நெருக்கமாக அரசியலில் இருந்தவர்கள். அண்மையில் கூட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயல்களுக்கு விநியோகிக்கவென 3000 குர்ஆன் பிரதிகளைக் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு அங்கு வழங்கி வைத்தார். அவரது கோரிக்கையையின் பேரில் பல வீதி அபிவிருத்திகளையும் மலையகத்தில் அமைச்சினூடாக செய்திருக்கின்றோம்.

சில வருடங்களுக்கு முன்
மிகவும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென பால் பக்கட்டுகள், தேங்காய் உட்பட பல பொருட்களை கொண்டுவந்து என்னிடம் தந்தார். மக்களை நேரடியாக என்னுடன் வந்து பார்த்தார்.
நாங்கள் மிக நெருக்கமான நண்பர்களாக பழகினோம்.
உண்மையில் அவரது தீடீர் மரணச் செய்தி என்னை மிகவுமே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவரது கட்சி வளர்ச்சியிலே அரும்பாடுபட்டார் அவர்.
அமரர் முன்னாள் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களது தலைமையிலே இக்கட்சி உருவாகிய காலம் முதல் நாங்கள் அவரோடு நெருக்கமாக பணிகளைச் செய்து இருக்கின்றோம். அதற்குப் பின் அவர்களது பேரன் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இக்கட்சியைத் தலைமை தாங்கி நடாத்தி வந்தார். 

ஆகவே எதிர்காலத்திலே இக்கட்சி தொடர்ந்து முன் செல்ல வேண்டும். முஸ்லீம்கள் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தவர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், குறிப்பாக செந்தில் தொண்டமான் உட்பட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments