மட்டக்களப்பில் வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்களுக்கு ஹொலன்ட் நாட்டின் உதவியில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான தொழிலுக்கு புலம் பெயர்ந்த நாடுகளுக்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு ஹொலன்ட் நாட்டு உதவியில் தொழில் திறமைகொண்ட பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமுக எழுச்சி நிறுவனமான எஸ்கோ நிறுவனம் உதவி வருகின்றது. 


மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திறமையுடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்திற்கு பங்களிப்பு செய்துவரும் தொழிற்பயிற்சி நிறுவனங்களான இலங்கை சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையம், மட்டக்களப்பு கிழங்கிலங்கை தொழிநுட்ப நிறுவகம், மட்டக்களப்பு பரியோவான் தொழில் பயிற்சி நிலையம் என்பவற்றின் பயன்பாட்டிற்கு குறித்த ஹொலன்ட்வோர் சைல்ட் நிறுவனத்தின் உதவியில் சுமார் 6 இலட்சம் பெறுமதியான பயிற்சி உபகரணங்கள் இன்று (29) அன்பளிப்பு செய்யப்பட்டன. 


இந்த அன்பளிப்புப் பொருட்களை உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் விசேட நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. எஸ்கோ நிறுவனத்தின் மாவட்டப்பணிப்பாளர் எஸ். பிரஸ்தியோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வன்பளிப்பு உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உத்தியோகபூர்வமாகக் பொறுப்பேற்று உரிய நிறுவணங்களின் பொறுப்பதிகாரிகளிடம் கையளித்தார். 


இந்நிகழ்வில் கிழங்கிலங்கை தொழிநுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை போல்சற்குணநாயகம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புன்னியமூர்த்தி, எஸ்கோ நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் செல்வி கோதை பொன்னுத்துரை, எஸ்கோ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ். உதயேந்திரன், சமுத்திரவியல் பல்கலைகக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்தி நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரீ. சுபராஜன், போதனாசிரியர் கே. அருட்சிவம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.No comments