அரச அதிகாரிகளை கேலிக்கு உள்ளாக்கும் வீடியோக்களை விசாரிக்க விசேட பொலிஸ் குழுக்கள்கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளை கேலிக்கு உள்ளாக்கும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது மற்றும் அவற்றை பகிரும் நபர்கள் குறித்து விசாரணை செய்யவதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விசேட பொலிஸ் குழுக்கள் இரண்டு நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்ட நபர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 183 ன் கீழ், ஒரு அரசாங்க அதிகாரியின் கடமைகளை தடுத்தல், நீதிக்கு இடையூறு விளைவித்தல், போன்ற குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு  தாக்கல் செய்யப்படுவதுடன் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையைத் தடுக்க வீடியோக்கள் பயன்படுத்தப்படும் என்றும், கணினி குற்றச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற மூன்று வீடியோக்கள் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.lnw

No comments